அ.முத்துலிங்கத்தின் பாராட்டு
எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் அ.முத்துலிங்கம். தமிழின் மிகவும் முக்கியமான எழுத்தாளரும் கூட! அவரது கதைகள் மட்டுமல்லாமல், அவ்வப்போது அவர் எழுதும் கட்டுரைகளும் கூட உலகத் தரம் வாய்ந்தது. தமிழில் புதுப் புது சொல்லாடல்கள், கதை ஒன்றினை எங்கெங்கிருந்தோ துவக்கும் உத்திகள், பழந்தமிழ் கதைகளை, சம்பவங்களை மிக நாசூக்காக தன் கதையினுள் புகுத்தி, வாசகனை மேம்படுத்தும் குறும்புகள், தனது அனுபவங்களை சுய எள்ளலுடன் சொல்லிச் செல்லும் பாங்கு, என பல விஷயங்களை அவர் தொடர்ந்து செய்வதைக் கண்டு வியந்து வாசிக்கும் ஒரு வாசகன் நான்!
ஒரு முறை, எனது வலைப் பக்கத்தில் நான் எழுதியிருந்த நீரின்றி அமையாது உலகு என்ற கட்டுரையை பாராட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அன்று நான் பட்ட சந்தோஷம் சொல்லி மாளாது! எனது தந்தை உயிரோடு இருந்து, நான் எழுதியதைப் படித்து, ஒரு தலையசைத்திருந்தால் வந்திருக்குமே? அதற்கு ஈடான சந்தோஷம் அது!
முதன் முதலில் நான் சிறுகதை எழுதியதையும், அது ஆனந்த விகடனில் வெளி வரப் போவதையும் அவரிடம் சொல்லிப் பகிர்ந்து கொண்டேன்! ஆர்வ மிகுதியில்தான்!
அதற்கு, பாராட்டுத் தெரிவித்து ஒரு மின்னஞ்சல்! பின்பு, கதையைப் படித்து விட்டு ஒரு மின்னஞ்சல்! என ஒரு கதைக்கு இரண்டு முறை பதக்கம் அணிவித்து விட்டார்! எனது வாழ்நாள் சாதனையின் ஆதாரம் இது! வழக்கமான பின்னூட்டத்தில் இட்டு வைக்க மனதில்லை! தனியாக ஒரு பதிவாக இட்டு வைத்தால், வீட்டு வரவேற்பறையில், நாம் பள்ளிக்கூடத்தில் பரிசு பெற்ற புகைப் படத்தை மாட்டி வைப்போமே! அப்படி வரும் காலத்தில் இங்கு வரும், பார்வையாளர்களுக்கு காட்டி மகிழ வாய்ப்பாக இருக்குமே! என இங்கே பதிவிடுகிறேன்!
என்னுடன் இணைந்து, எனக்காக மகிழும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!
————————————————-
அ.முத்துலிங்கம்
2 Comments
வசிஷ்டர் வாயாலயே பிரம்மரிஷின்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி இருக்கு இந்த பாராட்டு. இன்னும் நிறைய எழுதுங்கள் – எங்களுக்கு கதைகளும், உங்களுக்கு பாராட்டுகளும் குவியட்டும் – வாழ்த்துக்கள் சார் !!!
ஐயா அ.முத்துலிங்கம் அவர்களின் பாராட்டு பல இலக்கிய விருதுகளைவிட மேலானது, வாழ்த்துகள் அண்ணா…