மனிதனின் இரத்தம்
கூகுளில் போய் தேடிப் பார்த்தால் ஒரு கோடி பக்கம் மனிதனின் இரத்தத்தைப் பற்றி இருக்கும். நாம் சுருக்கமாக பார்த்தோமானால், நமது இரத்தம் மூன்றுக் கூறுகளை கொண்டது. ஒன்று சிகப்பு இரத்த அணுக்கள், பிறகு, வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் ப்ளேட்லட்ஸ்.
1. சிகப்பு இரத்த அணுக்கள் : எரித்தோஸைட்ஸ் எனப்படும் இவை சாதாரணமாக ஒரு மைக்ரோ லிட்டர் இரத்ததில்,4 முதல் 6 மில்லியன் அளவிற்கு காணப்படும். இவற்றின் வேலை நமது உடல் முழுமைக்கும் ஆக்ஸிஜனை எடுத்து செல்வது  மட்டுமே..
2.  வெள்ளை இரத்த அணுக்கள் : லூக்கோஸைட்ஸ் எனப்படும் இவை 4,000 முதல் 11000 வரை இருக்கும். இவற்றின் வேலை, நம் உடலில் எங்கு நோய் கிருமிகள் தென்பட்டாலும் விரைந்து சென்று தாக்குவது.
3. ப்ளேட்லட்ஸ் : தரோம்போஸைட்ஸ் எனப்படும் இவை இருபது லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை இருக்கும். நமது ரத்தம் உறையாமல், திரவ வடிவில் வைத்திருப்பது மட்டுமே இவற்றின் வேலை.
மேலே சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவைப்படும்.
இப்போது, நாம் டாக்டர் விர்ச்சோவைப் பார்க்கலாம்.
லுக்கேமியா என்று பெயரிட்டதோடு, அவரின் வேலை முடியவில்லை. தேர்ந்த பேதாலாஜிஸ்ட் ஆன அவர், தன் வாழ்நாள் முழுமையையும் ஆக்ரமிக்க போகும் செயலான ஒன்றை ஆரம்பித்தார். ஆம்! முதன் முதலில் மனித உடலை, முழுவதும் அணுக்களால் ( cellular terms) ஆன ஒரு வரைபடத்தை எழுத ஆரம்பித்தார்.
மனித உடல் என்றில்லை. எல்லா மிருகங்களும் ஏன், தாவரமும் கூட செல் எனப்படும் ஏதோ ஒரு வகை அணுக்களினால் ஆனதுதான். அதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு அணு, மற்றொரு அணுவில் இருந்து மட்டுமே உருவாகும். வேறு எந்த இயற்கையான, அல்லது செயற்கையான் பொருளும் ஒரு தனி அணுவை உருவாக்கவே முடியாது. இது ஒரு இயற்கையின் சூட்சுமம்.
இப்போது நமக்கு புரிய வேண்டியது, மனித உடல் வளர வேண்டுமானால், அணுக்கள் வளர வேண்டும். அணுக்கள் வளர இரண்டு வழிகள் உண்டு, ஒன்று, அவை ஒன்றின் மீது ஒன்றாக பலூன் மாதிரி அளவில் பெரிதாகிக் கொண்டே போகலாம். ஆனால் எண்ணிக்கை கூடாது. இதை ஹைப்பர் டிராபி என்று குறிப்பிடுகிறார்கள்.
இல்லை! அவை அளவில் ஒரே மாதிரி இருந்து கொண்டு, தன் எண்ணிக்கையை மட்டும் கூட்டிக் கொண்டே போகலாம். இவை அணுப் பெருக்கம்.இதை ஹைப்பர்லேசியா என்று குறிப்பிடுகிறார்கள். நம் உடலில் இரண்டு வகையான வளர்ச்சியும் நடைபெறுகிறது. முதல் வகையில் அணுக்கள் பெரிதாகிக் கொண்டு போவது. நமது, எலும்பு மற்றும் கொழுப்பு போன்றவற்றில். இரண்டாவது வகையில் அணு பெருக்கம் நடைபெறுவது நமது ரத்தம், தோல் மற்றும், கணையத்தில்.
இந்த வகைப் படுத்தலின் ஆராய்ச்சியில்தான், டாக்டர் விர்ச்சோவ் பேதலாஜிக்கல் ஹைப்பர்லேசியா என்ப்படும் கேன்ஸர் நோயினை வந்தடைந்தார். மைக்ரோஸ்கோபில் பார்க்கும் போது இந்த அணுக்களின் கட்டுக் கடங்காத வளர்ச்சியினை கண்டுபிடித்தார். இவற்றின் கட்டமைப்பை உற்று நோக்கும் போது, ஒரு அணு எப்படி மற்றொரு உயிரான இன்னொரு அணுவை உருவாக்கிறது என்பதையும், இதன் மூலம் இவற்றின் எண்ணிக்கைகள் எப்படி பெருகிக் கொண்டு போகிறது என்றும் கவனித்தார். வளர்ச்சி என்றால் சாதாரண வளர்ச்சி இல்லை. மிக மிக வேகத்துடன் கூடிய அசாதாரணமான வளர்ச்சி ஆகும். 1902ஆம் ஆண்டு டாக்டர் விர்ச்சோவ் இறக்கும் போது கேன்ஸர் எனப்படும் நோயின் மூலக் கூற்றினை கண்டறிந்தார்.
கேன்ஸர் என்பது இரத்த அணுக்கள், பேதலாஜிகல் ஹைப்பர்லேசியா எனப்படும் அணுப்பெருக்கத்தினை அசாதாரணமான முறையில், தன் போக்கிற்கு ஏற்ப பெருக்கிக் கொண்டே போவது.. எப்போதுமே நிறுத்தாமல்.
இந்த கட்டுபாடற்ற அணுப் பெருக்கம், அளவிற்கு மிக அதிகமான முறையில் சேர்ந்து விடுவதினால் உருவாகுவதுதான் ட்யூமர் எனப்படும் இரத்தக் கட்டிகள். இந்த கட்டிகள் உருவாகும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவும் தன்மை கொண்டது. மார்பகம், வயிறு, தோல், இரத்தம், மற்றும் மூளை போன்று இவை சென்று தங்கும் இடத்தை வைத்து, இவற்றிற்கு பெயரிட்டனர். எப்படி இருந்தாலும், எங்கிருந்தாலும், இவற்றின் அடிப்படை வேலை, தன்னிச்சையாக, கட்டுப்பாடின்றி அணுப் பெருக்கம் செய்து கொண்டே இருப்பது.
இதில் லுக்கேமியா என்பது, வெள்ளை இரத்த அணுக்களின் மிகத் தப்பிதமான, அளவிலாத அணுப் பெருக்கம். அதாவது, சுருக்கமாக, இது ஒரு திரவ வடிவிலான கேன்ஸர்.