ஆளுமை

புகழஞ்சலி.

By |2021-03-04T03:40:43+00:00March 3rd, 2021|ஆளுமை, நினைவு அஞ்சலி|

ஈரோடு டாக்டர் ஜீவா நேற்று முன்தினம் மறைந்து விட்டார். இந்தச் செய்தி அளித்த மனச்சோர்வு கடுமையானது. ஜெயமோகனின் 'அறம்' புத்தக வெளியீட்டுக்கு அவர்தான் தலைமை. ஈரோட்டில் நடைபெற்ற அந்த விழாவில் நான் அந்தத் தொகுப்பில் உள்ள 'வணங்கான்' கதையைப் பற்றி பேசினேன். நிறைவுரையாக ஜெயமோகன் பேசிய அற்புதமான உரையைக் கேட்டு கிறங்கிப் போய் வெளியே நின்றிருந்தபோது, எனது தோளைத் தட்டி, நீங்க மிகச் சிறப்பாக பேசினீங்க கருணா. உங்க பேஒச்சில் உண்மை இருந்தது என்றார் டாக்டர் ஜீவா.

கருப்பு கருணா

By |2020-12-21T17:36:39+00:00December 21st, 2020|ஆளுமை, இரங்கல்|

கருணாவை போய் பார்த்தேன். குளிர்ப்பெட்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். வழக்கமாக அவரது அருகில் இருக்கும் செங்கொடி இம்முறை அவரது மேலே போர்த்தப்பட்டிருந்தது. அதே களையான முகம். வாயில் வைக்கப்பட்டிருந்த வெற்றிலை மட்டுமே அந்நியமாக இருந்தது. சிறிது நேரம் உற்றுப் பார்த்தேன். போன கூட்டத்துக்கு நீங்க வரலையே! ஊரில் இல்லையா கருணா என கேட்டுவிடுவார் போலிருந்தது. சட்டென விலகி வந்து விட்டேன். நான் பள்ளியில் படித்த காலத்தில் பவா செல்லதுரையும், கருணாவும் தான் எனது ஆதர்சங்கள். எங்க சீனியர்கள் எல்லாம்

பவா எனும் பெருங்கனவுக்காரன்

By |2020-11-24T14:22:18+00:00November 22nd, 2020|Articles, Uncategorized, ஆளுமை|

ஒரு நாள் பவா வீட்டுத் தெருமுனையில் பவாவுடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு மூன்றுச் சக்கர வண்டியில் காய்கறிகளை வைத்துக் கொண்டு ஒரு அம்மா விற்றுக் கொண்டு வந்தார். கருணா! அந்தக்கா பேரு கஸ்தூரி. காய்கறி விற்கிறாங்களே! அவர்களிடம் எடை மிஷின் இருக்கான்னு பாருங்க என்றார். அந்த வண்டி அருகில் கடக்கும்போது பார்த்தேன். இல்லை. எப்படி பவா? கேட்கிறவங்களுக்கு அப்படியே கையில் அள்ளித் தருவாங்க. போதும்! என வாங்குறவங்க சொல்லும்வரை அள்ளிப் போட்டுகிட்டே இருப்பாங்க. என்ன

பறவை மனிதன் பால்பாண்டி

By |2020-11-24T12:39:35+00:00July 29th, 2020|Uncategorized, ஆளுமை|

பறவை மனிதன் பால்பாண்டி நெல்லை கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் அறிவிக்கப்படாத பாதுகாவலனாக தனது வாழ்நாளை அர்ப்பணித்து வாழும் பறவை மனிதன் பால்பாண்டிக்காக, கரோனா கால நிவாரணமாக நன்கொடை கேட்டு டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தேன் எனது அன்பான வேண்டுகோளை ஏற்று பலரும் அவருடைய வங்கிக் கணக்குக்கு நன்கொடை அனுப்பியுள்ளனர். இதுவரை ஏறக்குறைய ஒரு லட்ச ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் வந்துள்ளதாக அறிகிறேன். உங்களுடன் வெறும் இணையப் பரிச்சயம் மட்டுமே கொண்டுள்ள எனது வேண்டுகோளை ஏற்று முகமறியாத நண்பர்கள்

கனவுகளின் நாயகன்

By |2015-09-18T23:20:56+00:00September 18th, 2015|Articles, ஆளுமை, நினைவு அஞ்சலி|

கனவுகளின் நாயகன் அன்று மதியம் வகுப்பு இருக்கிறது அவருக்கு. அண்ணா பல்கலைகழகத்தின் ஒரு விருந்தினர் அறையில் அமர்ந்து அதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்துல் கலாம். புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்குச் சில காலமாக அந்த ஒற்றை அறைதான் அவரது தங்குமிடம். அப்போது, துணைவேந்தர் அவரை அழைப்பதாக அலுவலகப் பணியாள் வந்து கூறுகிறார். துணைவேந்தரின் அறைக்குள் 'மே ஐ கம் என்' எனக் கேட்டபடி கலாம் நுழைய, துணைவேந்தர் அவரை வரவேற்று தன் முன் அமரச் செய்கிறார்.

காவியக் கவிஞர் வாலி

By |2013-07-19T12:18:18+00:00July 19th, 2013|Articles, ஆளுமை, கட்டுரை, நினைவு அஞ்சலி|

காவியக் கவிஞன் இசைஞானி இளையராஜாவின், திருவாசகம் பாடல்களின் இசை வடிவத்தின் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். விழாவில், வைகோ ஆற்றிய உரை, எனது வாழ்நாளில் நான் கேட்டு வியந்த ஒரு அற்புத மேடைப் பேச்சுகளில் ஒன்று! மேடையில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாயைப் பிளந்து (நிஜமாகவே வாய் பிளந்து) கேட்டு இரசித்தார்! விழா நிறைவில், இளையராஜாவை சந்தித்து, ஒரு பட்டுத் துண்டு அணிவித்தேன். மிகுந்த உற்சாகமான மனநிலையில் இருந்த அவர், என்னைப் பார்த்து, கருணா!

சுஜாதாவின் ஆட்டோகிராஃப்

By |2013-02-27T20:36:28+00:00February 27th, 2013|Stories, ஆளுமை, சுஜாதா|

சுஜாதாவுடனான எனது முதல் சந்திப்பு இது. எனது கல்லூரியின் முதல் வருடம் முடியும் நேரத்தில், பல்கலைகழகம் முழுவதும் ஏதோ ஒரு வேலை நிறுத்தத்தால் திடீர் விடுமுறை கிடைத்தது. எனக்கு ஒரு வருடம் முன்பு சேர்ந்தவர்களே இன்னமும் முதல் வருடத் தேர்வு எழுதாமல் இருந்த வினோதமானச் சூழல் அது. அதாவது, பல்கலைகழகத்தில், ஒரே நேரத்தில் இரண்டு பேட்ச் முதல் வருட மாணவர்கள். அதனால், ராக்கிங் எல்லாம் ஒரு ஒழுங்குக்கு வராமல் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. ஊருக்கு திரும்புவதற்காக பெங்களூர்

இந்த ஆண்டின் சிறந்த மனிதன்.

By |2012-12-31T13:57:37+00:00December 31st, 2012|Articles, ஆளுமை, எண்ணங்கள்|

2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இந்த 2012ஆம் ஆண்டில் என்னை மிகவும் பாதித்த ஒரு மனிதனைப் பற்றி மிகவும் யோசித்து கொண்டிருக்கிறேன். அது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போரட்டக் குழுவின் தலைவர் திரு.சுப.உதயகுமார்தான். உதயகுமாரும், அவரது மக்களும் எதிர்த்து போராடுவது அரசின் ஏதோ ஒரு திட்டத்தை மட்டுமல்ல. உதயகுமார் எதிர்த்து நிற்பது, உலகின் மிக சக்தி வாய்ந்த இந்திய அரசாங்கத்தை! அது தனது சகல சக்தியையும் பிரயோகித்து பரப்பி விடும் கடும் அவதூறுகளை!

ஜெயமோகன் வந்திருந்தார்..

By |2011-11-11T07:04:34+00:00November 11th, 2011|Articles, ஆளுமை|

  சென்ற வாரத்தில் இரண்டு நாள் எழுத்தாளர் ஜெயமோகன் திருவண்ணாமலைக்கு வந்து எங்களுடன் தங்கியிருந்தார். எங்கள் பெரிய கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் தம்பதிகள் இருவருமே அவருடைய வாசகர்கள். அந்த திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்வு அதற்கு முந்தின நாள் எங்கள் கல்லூரியில் உள்ள திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. மணமக்கள் வீட்டார் இருவருமே, ஒருவரை ஒருவர் ஏற்கனவே நன்றாக தெரிந்து வைத்திருந்ததாலோ, அல்லது எல்லா ஏற்பாட்டினையும் பொது நண்பர்கள் சிலர் பார்த்துக் கொண்டதால் வந்த சவுகரியத்தினாலோ, அனைவருமே மிக

பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்

By |2011-10-28T18:17:16+00:00October 28th, 2011|Articles, ஆளுமை|

  பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்.   நேற்று காலையில் எனது செல்போன் ஒலித்தது. புதிய எண்ணாக இருக்கிறதே என்று நினைத்து கொண்டு எடுத்து காதில் வைக்கிறேன். கருணா! நான் பாரதிராஜா பேசுகிறேன்! என்றது அந்த குரல். தமிழகத்தின் எல்லைகளை தனது கரகரத்த குரலால் 35 ஆண்டுகளாக கட்டி வைத்திருக்கும் இயக்குநர், தமிழ் சினிமா வரலாற்றில் வெளிவந்த முதல் நிஜ சினிமாவின் படைப்பாளி பாரதிராஜாதான் அழைக்கிறார். எத்தனை முறை கேட்டாலும் என்னை லேசாக சிலிர்க்க வைக்கும் அவரின்