எண்ணங்கள்

Thoughts

நா. முத்துகுமார் எனும் புத்தகங்களின் காதலன்

By |2017-02-02T13:57:55+00:00February 2nd, 2017|எண்ணங்கள், கட்டுரை|

அந்தக் கருப்பு ஞாயிறு அன்று முன் இரவில், மயான எரிப்புக் கூடத்து மேடையில் படுத்திருந்த தம்பி நா. முத்துக்குமாரை சடங்குகள் முடிந்து தகன மேடையில் வைக்கும் இரும்புப் பலகையில் மாற்றும் அந்தக் கணத்தில் என் மனம் முற்றிலுமாக உடைந்து போனது. என் உள்ளுக்குள் தகிக்கும் அவன் நினைவுகளின் வெப்பம் தாளாமல் கதறிக் கொண்டு வெளியே ஓடி வந்து விட்டேன். யாழ்ப்பாணம் நூலக எரிப்பை எனது பள்ளி தமிழ் ஆசிரியர் விவரித்தபோது, அய்யோ! அந்த அறிவுப்பெட்டகத்தை இழந்த பிறகு

சன்மானம்

By |2014-07-24T21:16:22+00:00July 24th, 2014|Articles, எண்ணங்கள், கட்டுரை|

சன்மானம் எனது வாழ்நாள் சந்தோஷம், அன்று ஒரு சின்ன தபால் உறையில் என் மேசையின் மீது காத்திருந்தது. எனது பெயருக்கு வந்திருந்த அந்தக் கடித உறை பிரிக்கப் படாமலேயே இருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆனந்த விகடனில் இருந்து ஒரு கடிதமும், எனது 'சைக்கிள் டாக்டர்' கதைக்கான சன்மானமாக ரூபாய் மூவாயிரத்திற்கான காசோலையும் இருந்தது. அதுதான் எனது 44 வயதில் நான் சொந்தமாக சம்பாதிக்கும் முதல் பணம் என்பதை உணர்வதற்கு, ஒரு ஐஸ்கிரீம் முழுவதுமாக உருகுவதற்கான நேரம் ஆனது!

கோர்ட் படியேறிய அனுபவம்

By |2014-04-12T15:53:23+00:00April 12th, 2014|Articles, எண்ணங்கள்|

வாழ்க்கையிலேயே முதல் முறை! என்ற வாக்கியத்தை நாம் வாழ்க்கை முழுவதுமாக சொல்லிக் கொண்டிருப்போம் போலிருக்கு! எனது 'வாழ்க்கையில் முதன் முறையாக' நீதிமன்றக் கூண்டில் ஏறி நின்றேன்! சென்ற வாரத்தில் ஒரு நாள், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு நானும், எனது தங்கைகளும் சென்றிருந்தோம். சட்டப்படியான தேவை ஒன்றுக்காக! கூண்டிலெல்லாம் ஏற வேண்டியிருக்காது! நீதிபதி முன்னால் நம் பெயர் சொல்லி, கையெழுத்துப் போட்டால் போதும் என சொல்லப் பட்டிருந்தது. வரிசைப்படி, எங்கள் வழக்கு வந்ததும் நான் எழுந்து நின்றேன். எனது

நுனிக் கரும்பின் ருசி.

By |2013-08-15T06:49:10+00:00August 15th, 2013|Articles, எண்ணங்கள்|

நாற்பது வயது வரை எந்த முட்டாள்தனமும் செய்யாமல் ஒழுங்காகத்தான் இருந்து வந்தேன். பிறகுதான், புத்தித் தடுமாறி எழுத ஆரம்பித்தேன். வாசிப்புக்கு சாதாரண மனநிலை போதுமானது. எழுதுவதற்கு கொஞ்சம் அசாதாரண மனநிலை தேவைப்படும் என்பதைக் கூட எழுதத் துவங்கிய பிறகுதான் முழுவதுமாக உணர்ந்தேன். இணையத்தில் எழுதப் படுகின்ற தமிழ் கட்டுரைகள், கதைகள் பற்றி மிகத் தாமதமாகவே தெரிந்து கொண்டேன். பிறகு, தமிழ் வலைத் திரட்டி ஒன்றினை கண்டு பிடித்து, அதன் மூலமாக இணையத்தில் மிகச் சுதந்திரமாக எழுதிக் கொண்டிருந்த

விஸ்வரூபம் – பெற்றதும் இழந்ததும்.

By |2013-02-07T22:23:32+00:00February 7th, 2013|Articles, எண்ணங்கள், சினிமா|

விஸ்வரூபம் - பெற்றதும் இழந்ததும் கடந்த சில வாரங்களாக எனது நினைவுகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சனைகளைப் பற்றி நான் எந்த கருத்தையும் எழுத்தில் பதிவு செய்யக் கூடாது என்று மிகவும் பொறுமை காத்தேன். குறிப்பாக ஃபேஸ் புக்கில். அங்கேதான், அந்தத் திரைப்படத்திற்கோ, கமலுக்கோ அல்லது பொதுவான கருத்து சுதந்திரத்திற்கோ கூட ஆதரவாய் ஏதேனும் ஒரு கருத்தை தெரிவித்தாலோ, அல்லது வேறொருவரின் கருத்தினை பகிர்ந்து கொண்டாலோ கூட, எழுந்த எதிர்வினைகள் எனக்கு அதிர்ச்சியூட்டியது. நான்

கனவுத் தொழிற்சாலை நோக்கி…

By |2013-01-23T20:22:46+00:00January 23rd, 2013|Articles, எண்ணங்கள், சினிமா|

ரசனை என்பது விருப்பம் சார்ந்தது. ஆனால், விருப்பம் என்பது அறிவு சார்ந்தே இருக்கிறது. நமது இளைஞர்களின் ரசனை சார்ந்த விஷயங்கள் மிகக் குறுகிய வட்டத்தினுள் இருப்பதாக உணர்கிறேன். முக்கிய காரணம், அவர்கள் முன்னே கொட்டிக் கிடக்கும் பல்வேறு தரமான பிற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாததுதான். உதாரணத்துக்கு தமிழகத்தின் பொது ரசனைத்தளமான சினிமாவை பார்ப்போம். நம் இளைய தலைமுறையின் ரசனை என்பது அதிகபட்சம் அஜீத் vs விஜய் என்பதாகத்தானே இருக்கிறது. ஒரு சில அற்புதமான இளைஞர்களைத் தவிர

இந்த ஆண்டின் சிறந்த மனிதன்.

By |2012-12-31T13:57:37+00:00December 31st, 2012|Articles, ஆளுமை, எண்ணங்கள்|

2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இந்த 2012ஆம் ஆண்டில் என்னை மிகவும் பாதித்த ஒரு மனிதனைப் பற்றி மிகவும் யோசித்து கொண்டிருக்கிறேன். அது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போரட்டக் குழுவின் தலைவர் திரு.சுப.உதயகுமார்தான். உதயகுமாரும், அவரது மக்களும் எதிர்த்து போராடுவது அரசின் ஏதோ ஒரு திட்டத்தை மட்டுமல்ல. உதயகுமார் எதிர்த்து நிற்பது, உலகின் மிக சக்தி வாய்ந்த இந்திய அரசாங்கத்தை! அது தனது சகல சக்தியையும் பிரயோகித்து பரப்பி விடும் கடும் அவதூறுகளை!

நாகரீக சிவில் சமூகம்.

By |2012-11-21T23:33:01+00:00November 21st, 2012|Articles, எண்ணங்கள், கட்டுரை|

நாகரீக சிவில் சமூகத்தில் மரண தண்டனை கூடவே கூடாது! முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். ஒரே ஒரு சந்தேகம்தான். அப்படியானல் கொடும் குற்ற செயல்கள் புரியும் குற்றவாளிகளை என்ன செய்வது? மன்னிப்போம்! மறப்போம்! அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுவோம் என்று மகாத்மா சொன்னதைப் போல செய்து விடலாமா? அத்தனைப் பெருந்தன்மையும், ஞானமும் இருக்கும் நாட்டில் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்குமே வேலையிருக்காதே? மரண தண்டனையை கடுமையாக எதிர்க்கும் பலரும் அதற்கு மாற்றாக சொல்வது என்ன? மரண தண்டனை தரும் அளவிற்கு குற்றம் புரிந்தவர்களுக்கு

ப்ராய்லர் கோழிகள்

By |2012-06-17T20:54:44+00:00June 17th, 2012|Stories, எண்ணங்கள், கட்டுரை, கல்வி|

ஆயிரத்து நூற்று எண்பத்து ஒன்பது மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடத்தை இந்த மாணவி பெற்றிருக்கிறார், அடுத்த இடத்துக்கு இந்த மாணவி, அதற்கு அடுத்த இடத்துக்கு வேறொரு பெண் என பல இளம் முகங்களை +2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நாள் முழுவதும் தொலைக் காட்சியில் காட்டிக் கொண்டே இருந்தார்கள். உடன் முகம் நிறைந்த சிரிப்புடன் அவர்களின் பெற்றோர்கள் அந்த மாணவிகளை கட்டியணைத்தபடி இனிப்பு ஊட்டிக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சிகளில் என் கண்ணுக்குப் புலப்பட்டது, அந்த மாணவ,

புத்தாண்டு பரிசு..

By |2011-12-29T22:08:15+00:00December 29th, 2011|Articles, எண்ணங்கள்|

  புத்தாண்டு பரிசாக எனது கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஜெயமோகன் எழுதி வம்சி புக்ஸ் வெளியிட்ட "அறம்" புத்தகத்தை இன்று பரிசளித்தேன். எங்கள் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரியும் தமிழ் மொழி அறியாத வெளிமாநிலத்தவர்கள் ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏறக்குறைய 250 புத்தகங்களை ஒரே நேரத்தில் பரிசாக அளித்தது, எனக்கு பேருஉவகை அளித்தது என்றே சொல்ல வேண்டும். எங்கள் பொறியியல் கல்லூரியின் பேராசியர்களில் பலர் தத்தம் துறையினில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு பி.எச்.டி முடித்தவர்கள். பல