நீலத் திமிங்கிலம்

By |2013-06-16T11:00:09+00:00June 16th, 2013|Stories, Tours, Writings, பயண அனுபவக் கட்டுரை|

கடலின் மொத்த நீலத்தையும் வானம் உள் வாங்கியிருந்தது. சூரிய வெளிச்சம் மிகப் பிரகாசமாக இருக்கும் நண்பகல் நேரம் அது! நடுக் கடலில் தன்னந்தனியே அந்தப் படகு மெல்ல ஆடி, அசைந்து கொண்டிருக்கிறது. அதன் மீது, அரை நிஜார் அணிந்து கொண்டு சில வெற்று மார்பு வெள்ளைக்காரர்கள் தங்கள் கையிலிருக்கும் நீள லென்ஸ் காமிராவைக் கொண்டு கடலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென, கடலின் உள்ளேயிருந்து ஒரு பூதாகரமான உருவம் மேலெழுந்து, அதன் உடல் முழுமையும் சில கணங்கள் காற்றில்