Articles

சாமானியர்களின் நாயகன்

By |2013-12-23T14:52:52+00:00December 23rd, 2013|Articles, அரசியல்|

தில்லி சட்டமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியமைக்க இருக்கிறார். மக்கள் தீர்ப்பு ஆம் ஆத்மி பார்ட்டிக்கோ (28) , பாரதிய ஜனதாவுக்கு(31) ஆதரவாக அமைந்ததாக நான் எண்ண வில்லை. மக்கள் தீர்ப்பின் ஒரே நோக்கம் அது ஆளும் காங்கிரஸ் அரசை புறந்தள்ளுவது. அந்த நோக்கம், முதல் அமைச்சர் ஷீலா தீக்ஷித்தையே பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்ததில் சிறப்பாகவே நிறைவேறியுள்ளது. அது மக்களுடைய வெற்றி. இனி அடுத்த ஆட்சி பற்றியது: தனிப் பெரும் கட்சியான பிஜேபி ஆட்சியமைப்பது தான் முறை.

நடவு

By |2013-12-04T21:50:52+00:00December 4th, 2013|Articles|

நடவு நடவு ஒரு நல்ல நாள் பார்த்து நடவுக்கான நாள் குறிக்கப் படும், அந்த நிமிடம் முதல் நாற்று நட்டு முடிப்பது வரை எனது நைனாவின் சிந்தனை, செயல் எல்லாமே நடவு குறித்துதான் இருக்கும். நெல் பயிரிடுவதற்கான முன்னேற்பாடு என்பது சில மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டு, சந்தையில் நல்ல உழவு மாடுகள் வாங்குவதில் தொடங்கும். ஒவ்வொரு நடவுக்கும் புதிதாக ஒரு ஜோடி மாடு வாங்குவது நைனாவின் சென்டிமெண்ட். நல்ல விதையை தேடிச் சென்று, வாங்கி

பேரம்

By |2013-09-10T18:51:02+00:00September 10th, 2013|Articles, தழுவல் சிறுகதைகள்|

அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் அலுவலகத்தில், அட்வகேட் வெங்கடேஸ்வரனைப் பார்க்க, அவரது அறை முன் எப்படியும் பத்து பேருக்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தனர். அதே அலுவலகத்தில் பங்குதாரர்களாக இருக்கும் இன்னும் பிற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு முன்னர் வெறும் காலி நாற்காலிகள் மட்டும். இத்தனைக்கும், வெங்கடேஸ்வரன் ஐம்பது வயதை கடந்து விட்டிருப்பினும், அங்கு இருப்பதில் அவர்தான் ஜூனியர்! ஆனால், அந்த அலுவலகத்தின் உயிர் நாடி! பரபரப்பான அந்த நேரத்தில் அங்கு தோளில் ஒரு மடிக்கணினிப் பையுடன் ஒரு இளைஞன்

அ.முத்துலிங்கத்தின் பாராட்டுக் கடிதம்.

By |2013-08-21T21:49:57+00:00August 21st, 2013|Articles, பாராட்டுக் கடிதங்கள்|

அ.முத்துலிங்கத்தின் பாராட்டு எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் அ.முத்துலிங்கம். தமிழின் மிகவும் முக்கியமான எழுத்தாளரும் கூட! அவரது கதைகள் மட்டுமல்லாமல், அவ்வப்போது அவர் எழுதும் கட்டுரைகளும் கூட உலகத் தரம் வாய்ந்தது. தமிழில் புதுப் புது சொல்லாடல்கள், கதை ஒன்றினை எங்கெங்கிருந்தோ துவக்கும் உத்திகள், பழந்தமிழ் கதைகளை, சம்பவங்களை மிக நாசூக்காக தன் கதையினுள் புகுத்தி, வாசகனை மேம்படுத்தும் குறும்புகள், தனது அனுபவங்களை சுய எள்ளலுடன் சொல்லிச் செல்லும் பாங்கு, என பல விஷயங்களை அவர் தொடர்ந்து

நுனிக் கரும்பின் ருசி.

By |2013-08-15T06:49:10+00:00August 15th, 2013|Articles, எண்ணங்கள்|

நாற்பது வயது வரை எந்த முட்டாள்தனமும் செய்யாமல் ஒழுங்காகத்தான் இருந்து வந்தேன். பிறகுதான், புத்தித் தடுமாறி எழுத ஆரம்பித்தேன். வாசிப்புக்கு சாதாரண மனநிலை போதுமானது. எழுதுவதற்கு கொஞ்சம் அசாதாரண மனநிலை தேவைப்படும் என்பதைக் கூட எழுதத் துவங்கிய பிறகுதான் முழுவதுமாக உணர்ந்தேன். இணையத்தில் எழுதப் படுகின்ற தமிழ் கட்டுரைகள், கதைகள் பற்றி மிகத் தாமதமாகவே தெரிந்து கொண்டேன். பிறகு, தமிழ் வலைத் திரட்டி ஒன்றினை கண்டு பிடித்து, அதன் மூலமாக இணையத்தில் மிகச் சுதந்திரமாக எழுதிக் கொண்டிருந்த

காவியக் கவிஞர் வாலி

By |2013-07-19T12:18:18+00:00July 19th, 2013|Articles, ஆளுமை, கட்டுரை, நினைவு அஞ்சலி|

காவியக் கவிஞன் இசைஞானி இளையராஜாவின், திருவாசகம் பாடல்களின் இசை வடிவத்தின் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். விழாவில், வைகோ ஆற்றிய உரை, எனது வாழ்நாளில் நான் கேட்டு வியந்த ஒரு அற்புத மேடைப் பேச்சுகளில் ஒன்று! மேடையில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாயைப் பிளந்து (நிஜமாகவே வாய் பிளந்து) கேட்டு இரசித்தார்! விழா நிறைவில், இளையராஜாவை சந்தித்து, ஒரு பட்டுத் துண்டு அணிவித்தேன். மிகுந்த உற்சாகமான மனநிலையில் இருந்த அவர், என்னைப் பார்த்து, கருணா!

விஸ்வரூபம் – பெற்றதும் இழந்ததும்.

By |2013-02-07T22:23:32+00:00February 7th, 2013|Articles, எண்ணங்கள், சினிமா|

விஸ்வரூபம் - பெற்றதும் இழந்ததும் கடந்த சில வாரங்களாக எனது நினைவுகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சனைகளைப் பற்றி நான் எந்த கருத்தையும் எழுத்தில் பதிவு செய்யக் கூடாது என்று மிகவும் பொறுமை காத்தேன். குறிப்பாக ஃபேஸ் புக்கில். அங்கேதான், அந்தத் திரைப்படத்திற்கோ, கமலுக்கோ அல்லது பொதுவான கருத்து சுதந்திரத்திற்கோ கூட ஆதரவாய் ஏதேனும் ஒரு கருத்தை தெரிவித்தாலோ, அல்லது வேறொருவரின் கருத்தினை பகிர்ந்து கொண்டாலோ கூட, எழுந்த எதிர்வினைகள் எனக்கு அதிர்ச்சியூட்டியது. நான்

கனவுத் தொழிற்சாலை நோக்கி…

By |2013-01-23T20:22:46+00:00January 23rd, 2013|Articles, எண்ணங்கள், சினிமா|

ரசனை என்பது விருப்பம் சார்ந்தது. ஆனால், விருப்பம் என்பது அறிவு சார்ந்தே இருக்கிறது. நமது இளைஞர்களின் ரசனை சார்ந்த விஷயங்கள் மிகக் குறுகிய வட்டத்தினுள் இருப்பதாக உணர்கிறேன். முக்கிய காரணம், அவர்கள் முன்னே கொட்டிக் கிடக்கும் பல்வேறு தரமான பிற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாததுதான். உதாரணத்துக்கு தமிழகத்தின் பொது ரசனைத்தளமான சினிமாவை பார்ப்போம். நம் இளைய தலைமுறையின் ரசனை என்பது அதிகபட்சம் அஜீத் vs விஜய் என்பதாகத்தானே இருக்கிறது. ஒரு சில அற்புதமான இளைஞர்களைத் தவிர

இந்த ஆண்டின் சிறந்த மனிதன்.

By |2012-12-31T13:57:37+00:00December 31st, 2012|Articles, ஆளுமை, எண்ணங்கள்|

2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இந்த 2012ஆம் ஆண்டில் என்னை மிகவும் பாதித்த ஒரு மனிதனைப் பற்றி மிகவும் யோசித்து கொண்டிருக்கிறேன். அது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போரட்டக் குழுவின் தலைவர் திரு.சுப.உதயகுமார்தான். உதயகுமாரும், அவரது மக்களும் எதிர்த்து போராடுவது அரசின் ஏதோ ஒரு திட்டத்தை மட்டுமல்ல. உதயகுமார் எதிர்த்து நிற்பது, உலகின் மிக சக்தி வாய்ந்த இந்திய அரசாங்கத்தை! அது தனது சகல சக்தியையும் பிரயோகித்து பரப்பி விடும் கடும் அவதூறுகளை!

நினைவுகளின் வேரினூடே சில மரங்கள்…

By |2012-11-27T15:07:16+00:00November 27th, 2012|Articles, கட்டுரை|

6000 வருடம் வயதுள்ள ஆப்ரிக்காவின் பேபாப் மரம் எனது இளம் வயது நினைவுகளின் அடுக்குகளில் நிறைய மரங்களும் பதிந்திருக்கிறது. எனது நான்காம் வகுப்பின் போது பள்ளிக் கல்விச் சுற்றுலாவாக அடையாறு ஆலமரம், அஷ்ட லட்சுமி கோவில், மெரினா கடற்கரை மற்றும் மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றனர். அவற்றில் எனக்கு இன்னமும் நினைவில் இருப்பது அடையாறு ஆலமரத்தைப் பார்த்ததுதான்! வேருக்கும், விழுதுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் தெரியாமல், அந்த பரந்த நிலம் முழுதும் தனது