நிழல் மரியாதை

By |2011-03-06T11:03:00+00:00March 6th, 2011|உதிரா நினைவுகள்|

ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்த நடிகர் மம்முட்டியின் வாழ்வனுபங்களான மூன்றாம் பிறை புத்தகம் படித்து முடித்தேன். மம்முட்டி அதில் அமிதாப் பச்சனோடு சேர்ந்து ஒரு விழாவில் கலந்து கொண்டதையும், அப்போது அமிதாப்பச்சன் பெண்களிடம் பேசும் ஒவ்வொரு முறையும் எழுந்து நின்று பேசியதையும், அதை செய்யாத தாம் மிகவும் வெட்கப் பட்டதாகவும் கூறியுள்ளார். இதை படித்த போது எனக்கு நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அது நேர்மாறானது. நான் பொறியியல் கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்த சமயம்.