Monthly Archives: October 2011

கூடங்குளம் : சாபமல்ல.. வரமே.

By |2011-10-30T21:35:33+00:00October 30th, 2011|Articles, அறிவியல்|

  கூடங்குளம் : சாபமல்ல.. வரமே.   இந்த அணு உலை அத்தனை முக்கியமென்றால், இதனை போயஸ் தோட்டத்திலோ அல்லது ரேஸ் கோர்ஸ் ரோட்டிலேயோ அமைத்துக் கொள்ளட்டுமே? சமீபத்தில் வலைத் தளங்களில் நான் படித்த பல ஆவேசமான கேள்விகளில் இதுவும் ஒன்று. இடிந்தகரையில் ஒரு பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டதும், கூடங்குளம் அணுமின் நிலையத்தினை உடனே இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து இருப்பதும் நம் சுற்று சூழல் ஆர்வலர்களை இது போன்ற மேலும் பல

மயானங்களைத் தேடி

By |2011-10-30T14:07:37+00:00October 30th, 2011|Articles, தொட்டு விடும் தூரம் தான்...|

மயானங்களைத் தேடி... 1533ஆம் ஆண்டின் அந்தக் குளிர் காலத்தில், ஆண்ட்ரியஸ் வெசாலியஸ் என்னும் அந்த பத்தொன்பது வயது இளைஞன் பெல்ஜியத்திலிருந்து பாரிஸ் பல்கலைகழகத்திற்கு சர்ஜரி படிக்க வந்து சேர்ந்தான். அவன் மிகவும் கவரப்பட்டிருந்த கேலனின் (anatomy) உடல்கூறியல் மற்றும் (pathology) நோய்கூறியல் (என் மொழிபெயர்ப்பு சரியா?) படிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் அவன் பாரிஸ் நகருக்கு வந்திருந்தான். வெசாலியஸ் வந்து சேர்ந்த நேரம், அவனது பல்கலைகழத்தில், உடல் கூறியல் துறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இறந்த உடல்களை

பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்

By |2011-10-28T18:17:16+00:00October 28th, 2011|Articles, ஆளுமை|

  பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்.   நேற்று காலையில் எனது செல்போன் ஒலித்தது. புதிய எண்ணாக இருக்கிறதே என்று நினைத்து கொண்டு எடுத்து காதில் வைக்கிறேன். கருணா! நான் பாரதிராஜா பேசுகிறேன்! என்றது அந்த குரல். தமிழகத்தின் எல்லைகளை தனது கரகரத்த குரலால் 35 ஆண்டுகளாக கட்டி வைத்திருக்கும் இயக்குநர், தமிழ் சினிமா வரலாற்றில் வெளிவந்த முதல் நிஜ சினிமாவின் படைப்பாளி பாரதிராஜாதான் அழைக்கிறார். எத்தனை முறை கேட்டாலும் என்னை லேசாக சிலிர்க்க வைக்கும் அவரின்

ஹிப்போகிரடஸ்.

By |2011-10-27T16:18:46+00:00October 27th, 2011|Articles, தொட்டு விடும் தூரம் தான்...|

  ஹிப்போகிரடஸ் காலத்தில்.. கான்ஸர் என்ற இந்த நோய்க்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று பார்க்கலாமா? பார்க்கலாம். சுவாரஸ்யமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. முதன் முதலில் ஹிப்போகிரடஸ்தான் கி.மு.400 ஆண்டு வாக்கில் அவரின் ஒரு மருத்துவ குறிப்புகளில் இந்த நோயினை கார்கினோஸ் என்று குறிப்பிடுகிறார். கிரேக்கத்தில் கார்கினோஸ் என்றால் நண்டு. இந்த கான்ஸர் கட்டியானது ஒரு விதத்தில் அது உருவாகியிருக்கும் இடத்தை தனது இரத்த நாளங்களால் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும். அது ஒரு நண்டு மணலில்

மீண்டும் கட்டுரைத் தொடர்..

By |2011-10-25T14:11:34+00:00October 25th, 2011|Articles, எண்ணங்கள்|

  மீண்டும் கட்டுரைத் தொடர்.. ஆகஸ்டு மாதம் கடைசியாக தங்கமீன் கட்டுரை எழுதி வெளியிட்ட பிறகு, புதிதாக எதுவும் எழுத வில்லை. செப்டம்பர் மாதம் முழுவதும் வெளிநாடு சென்றிருந்தேன். இருந்தாலும், இடைப் பட்ட இந்த நாட்களில் ஏறத்தாழ 5000 முறை யாரேனும் எனது இந்த வலைத்தளத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். புதிதாக ஏதும் எழுதாதது அவர்களுக்கு ஏமாற்றமாகக் கூட இருந்திருக்கலாம். நேரிலும் என்னை பார்ப்பவர்கள் என்ன? புதிதாக எதுவும் எழுதவில்லையா? என்றும் கேட்கிறார்கள். இடையில், என்னை ஆச்சர்யப்

உள்ளாட்சி தேர்தல்.

By |2011-10-22T22:56:22+00:00October 22nd, 2011|Articles, எண்ணங்கள்|

  உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டது. நான் எதிர்பார்த்தது போலவே மிகப் பெரும்பான்மையான இடங்களில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மாநில அரசை மிகவும் சார்ந்திருக்கக் கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதே கட்சியை சார்ந்தவர்கள் பதவிக்கு வருவது ஒரு விதத்தில் பல சங்கடங்களைத் தவிர்க்கும். எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளையும் சமமாக பாவிக்கக் கூடிய மனப் பக்குவம் அல்லது மன விசாலம் (விலாசம் அல்ல) அநேகமாக பல