உயிர் வாழ்தலின் நிமித்தம்.

By |2012-08-29T15:11:41+00:00August 29th, 2012|poem, கவிதை ( மாதிரி )|

இன்று பல வண்ணம் கொண்ட மீன்கொத்திப் பறவை சாம்பல் நிற பட்டாம்பூச்சி ஒன்றினை படக்கென பிடித்து உண்டதைக் கண்டேன். அன்றொரு நாள், சிறுத்தை ஒன்று பசி தாளாமல் மண்ணுளிப் பாம்பை பிடித்துத் தின்பதை தொலைக் காட்சியில் பார்த்தேன். எங்கள் வீட்டுப் பறவைக் கூண்டுக்குள் எப்படியோ உள் புகுந்து காதல் இணைகளின் ஏதோ ஒன்றினை பிடித்து விழுங்கி விடுகிறது ஒரு கரு நாகம்! அன்றொரு நாள் முயல் என்றெண்ணி ஒரு கொழுத்த அணிலைக் கவ்விக் கொண்டு வந்தது வேட்டைக்குப்