இந்த ஆண்டின் சிறந்த மனிதன்.

By |2012-12-31T13:57:37+00:00December 31st, 2012|Articles, ஆளுமை, எண்ணங்கள்|

2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இந்த 2012ஆம் ஆண்டில் என்னை மிகவும் பாதித்த ஒரு மனிதனைப் பற்றி மிகவும் யோசித்து கொண்டிருக்கிறேன். அது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போரட்டக் குழுவின் தலைவர் திரு.சுப.உதயகுமார்தான். உதயகுமாரும், அவரது மக்களும் எதிர்த்து போராடுவது அரசின் ஏதோ ஒரு திட்டத்தை மட்டுமல்ல. உதயகுமார் எதிர்த்து நிற்பது, உலகின் மிக சக்தி வாய்ந்த இந்திய அரசாங்கத்தை! அது தனது சகல சக்தியையும் பிரயோகித்து பரப்பி விடும் கடும் அவதூறுகளை!