பேரம்

By |2013-09-10T18:51:02+00:00September 10th, 2013|Articles, தழுவல் சிறுகதைகள்|

அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் அலுவலகத்தில், அட்வகேட் வெங்கடேஸ்வரனைப் பார்க்க, அவரது அறை முன் எப்படியும் பத்து பேருக்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தனர். அதே அலுவலகத்தில் பங்குதாரர்களாக இருக்கும் இன்னும் பிற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு முன்னர் வெறும் காலி நாற்காலிகள் மட்டும். இத்தனைக்கும், வெங்கடேஸ்வரன் ஐம்பது வயதை கடந்து விட்டிருப்பினும், அங்கு இருப்பதில் அவர்தான் ஜூனியர்! ஆனால், அந்த அலுவலகத்தின் உயிர் நாடி! பரபரப்பான அந்த நேரத்தில் அங்கு தோளில் ஒரு மடிக்கணினிப் பையுடன் ஒரு இளைஞன்