கருப்பு கருணா

By |2020-12-21T17:36:39+00:00December 21st, 2020|ஆளுமை, இரங்கல்|

கருணாவை போய் பார்த்தேன். குளிர்ப்பெட்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். வழக்கமாக அவரது அருகில் இருக்கும் செங்கொடி இம்முறை அவரது மேலே போர்த்தப்பட்டிருந்தது. அதே களையான முகம். வாயில் வைக்கப்பட்டிருந்த வெற்றிலை மட்டுமே அந்நியமாக இருந்தது. சிறிது நேரம் உற்றுப் பார்த்தேன். போன கூட்டத்துக்கு நீங்க வரலையே! ஊரில் இல்லையா கருணா என கேட்டுவிடுவார் போலிருந்தது. சட்டென விலகி வந்து விட்டேன். நான் பள்ளியில் படித்த காலத்தில் பவா செல்லதுரையும், கருணாவும் தான் எனது ஆதர்சங்கள். எங்க சீனியர்கள் எல்லாம்