நீர்

ததும்பும் நீர் நினைவுகள்

By |2012-03-22T20:25:18+00:00March 22nd, 2012|Articles, கட்டுரை|

  நீரின்றி அமையாது....     நான் பிறந்து வளர்ந்த வீடு, இப்போது நகரின் மையப் பகுதியின் போக்குவரத்து நெரிசலிலும், பேருந்துகளின் காற்றொலிப்பான் சத்தத்திலும் சிக்குண்டு இருக்கிறது. சில ஆண்டுகளாகவே, அருகில் இருக்கும் எங்கள் குடும்பத்தின் தோட்டத்தில் ( விவசாய நிலத்தில்) வசித்து வரும் காரணத்தால், அதன் அமைதியான சூழலும், சுத்தமான காற்றும் எங்களுக்கு மிகவும் பழகிப் போய்விட்டது. என் மகள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்கள் ஓடியாட வசதியாகவும், பல ரக வெளிநாட்டு கிளி வகைகள்

உயிர் நீர்

By |2012-03-11T22:12:34+00:00March 11th, 2012|Stories, சிறுகதை|

  வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஓளிர்ந்து கொண்டிருந்தது. சூரியன் எங்கு நோக்கினும் தென்படவில்லை. சில நாட்களாகவே கிழக்கிலிருந்து மேற்கு வரையிலான எந்தப் பாதையிலும் சூரியன் காணக் கிடைக்கவில்லை. மேகமற்ற வறண்ட வானில் சூரியனே தென்படாதது மக்களுக்கு பெரும் அச்சமூட்டியது. மாலைக்கும் இரவுக்கும் இடையேயான வெளிச்சம் மட்டும் மங்காமலேயிருந்தது. பகல் இன்னமும் முடியவில்லை என பறவைகள் கூட்டுக்குத் திரும்பாமல் தனது இரையைத் தேடிக் கொண்டிருக்க, இரவு கவிழத் துவங்கி விட்டதென ஓநாய்களும், சிறுத்தைகளும், தனக்கான வேட்டையைத் தேடி நிலமெங்கும்