Monthly Archives: December 2013

சாமானியர்களின் நாயகன்

By |2013-12-23T14:52:52+00:00December 23rd, 2013|Articles, அரசியல்|

தில்லி சட்டமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியமைக்க இருக்கிறார். மக்கள் தீர்ப்பு ஆம் ஆத்மி பார்ட்டிக்கோ (28) , பாரதிய ஜனதாவுக்கு(31) ஆதரவாக அமைந்ததாக நான் எண்ண வில்லை. மக்கள் தீர்ப்பின் ஒரே நோக்கம் அது ஆளும் காங்கிரஸ் அரசை புறந்தள்ளுவது. அந்த நோக்கம், முதல் அமைச்சர் ஷீலா தீக்ஷித்தையே பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்ததில் சிறப்பாகவே நிறைவேறியுள்ளது. அது மக்களுடைய வெற்றி. இனி அடுத்த ஆட்சி பற்றியது: தனிப் பெரும் கட்சியான பிஜேபி ஆட்சியமைப்பது தான் முறை.

மதுரை வீரன்

By |2013-12-12T21:08:36+00:00December 12th, 2013|Stories|

ஒரு பெரிய சாலை விபத்து நேரும் அந்தக் கணத்தில் நீங்கள் அருகில் இருக்க நேரிட்டால் என்ன செய்வீர்கள்? செய்வதறியாது திகைத்து அப்படியே உறைந்து நிற்பீர்கள்! அல்லது, பெரும் பதட்டம் அடைந்து, அங்கும் இங்கும் ஓடுவீர்கள்! அல்லது உடனே சுதாரித்துக் கொண்டு, காயமடைந்தவர்களுக்கு உதவச் செல்வீர்கள்! ஒரு வேளை, அந்தக் கணத்தில் நான் அங்கிருக்க நேரிட்டால் என்ன செய்வேன் என எண்ணிப் பார்க்கிறேன். சற்றும் பதட்டப் படாமல், உடைந்த கண்ணாடித் துண்டுகளைத் தாண்டிச் சென்று, வண்டியின் ஓட்டுநர் இருக்கையின்

நடவு

By |2013-12-04T21:50:52+00:00December 4th, 2013|Articles|

நடவு நடவு ஒரு நல்ல நாள் பார்த்து நடவுக்கான நாள் குறிக்கப் படும், அந்த நிமிடம் முதல் நாற்று நட்டு முடிப்பது வரை எனது நைனாவின் சிந்தனை, செயல் எல்லாமே நடவு குறித்துதான் இருக்கும். நெல் பயிரிடுவதற்கான முன்னேற்பாடு என்பது சில மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டு, சந்தையில் நல்ல உழவு மாடுகள் வாங்குவதில் தொடங்கும். ஒவ்வொரு நடவுக்கும் புதிதாக ஒரு ஜோடி மாடு வாங்குவது நைனாவின் சென்டிமெண்ட். நல்ல விதையை தேடிச் சென்று, வாங்கி