ரெமிங்டன்

By |2014-10-13T10:09:51+00:00October 13th, 2014|Stories|

ரெமிங்டன் எங்கள் ஊர் அண்ணாமலையார் கோவிலுக்கு எதிரில் இருந்த மெட்ராஸ் டீக்கடையில் தான் அந்த விசாரணை நடந்தது. இளங்கோதான் அந்த பஞ்சாயத்துக்கு நாட்டாமை. அவன் எதிரில் நானும், கணேஷும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு இரு நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். வழக்கம் போல எங்களின் கைகளில் அந்தக் கடையின் புகழ் பெற்ற மசாலா டீ. உடன் சால்ட் பிஸ்கெட். இளங்கோதான், அந்த கடும் மவுனத்தை உடைத்து பேச்சை ஆரம்பித்து வைத்தான். சொல்லுடா! கருணா, ஏன் உன் மேல கோவமா இருக்கான்?