பெருமாள் முருகன் பெ.முருகனான கதை

By |2015-01-14T21:19:13+00:00January 14th, 2015|சிறுகதை|

ஒரு பனிக் காலத்தின் முன் இரவு. ஊரே ஓரிடத்தில் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு கூட்டம், அங்கிருக்கும் ஒரு மனிதனின் கையைப் பிடித்து முறுக்கி, கழுத்தை நெறித்துப் பிடித்திருக்கிறது. நீ எழுதியது தவறு. மன்னிப்புக் கேள்! என்கிறது ஒரு அதிகாரக் குரல். அவனும் சூழ்நிலை அறிந்து, தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறான். இனி வரும் பிரதிகளில் அவர்கள் ஆட்சேபிக்கும் கருத்துகள் அத்தனையும் நீக்கப்படும் எனவும் உறுதியளிக்கிறான். கூட்டம் தன் வெற்றிக்காக ஆர்ப்பரிக்கிறது.