கனவுகளின் நாயகன்
கனவுகளின் நாயகன் அன்று மதியம் வகுப்பு இருக்கிறது அவருக்கு. அண்ணா பல்கலைகழகத்தின் ஒரு விருந்தினர் அறையில் அமர்ந்து அதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்துல் கலாம். புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்குச் சில காலமாக அந்த ஒற்றை அறைதான் அவரது தங்குமிடம். அப்போது, துணைவேந்தர் அவரை அழைப்பதாக அலுவலகப் பணியாள் வந்து கூறுகிறார். துணைவேந்தரின் அறைக்குள் 'மே ஐ கம் என்' எனக் கேட்டபடி கலாம் நுழைய, துணைவேந்தர் அவரை வரவேற்று தன் முன் அமரச் செய்கிறார்.