கட்டுரை

நா. முத்துகுமார் எனும் புத்தகங்களின் காதலன்

By |2017-02-02T13:57:55+00:00February 2nd, 2017|எண்ணங்கள், கட்டுரை|

அந்தக் கருப்பு ஞாயிறு அன்று முன் இரவில், மயான எரிப்புக் கூடத்து மேடையில் படுத்திருந்த தம்பி நா. முத்துக்குமாரை சடங்குகள் முடிந்து தகன மேடையில் வைக்கும் இரும்புப் பலகையில் மாற்றும் அந்தக் கணத்தில் என் மனம் முற்றிலுமாக உடைந்து போனது. என் உள்ளுக்குள் தகிக்கும் அவன் நினைவுகளின் வெப்பம் தாளாமல் கதறிக் கொண்டு வெளியே ஓடி வந்து விட்டேன். யாழ்ப்பாணம் நூலக எரிப்பை எனது பள்ளி தமிழ் ஆசிரியர் விவரித்தபோது, அய்யோ! அந்த அறிவுப்பெட்டகத்தை இழந்த பிறகு

நான் கார்ட் தேய்த்த கதை

By |2016-12-20T17:39:31+00:00December 20th, 2016|கட்டுரை, பயண அனுபவக் கட்டுரை|

#Cashless இந்தியா சின்னதாக ஒரு பக்திச்சுற்றுலா. மனைவி என்னை அழைத்துச் (இழுத்து) சென்றிருந்தார். அன்று மதியம் நாசிக் நகரில் (நமக்கெல்லாம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அதே ஊர்தான்) உள்ள காலாராம் (கருப்பு ராமர்) கோவிலுக்குச் சென்று வெளியே வரும்போது ஒரு பித்தளைச் சிலைகள் விற்கும் கடை எங்களை ஈர்த்தது.  முதலில் ஒரே ஒரு சின்னதாக தவழும் குழந்தை கிருஷ்ணர் சிலை வாங்கத் துவங்கி அது சற்றேப் பெரிய ராதாகிருஷ்ணன் சிலை வரை நீண்டு கொண்டுச் சென்றது. கடைக்காரரிடம்

காதல் கடிதம் எழுதுபவன்

By |2016-03-02T22:24:44+00:00March 2nd, 2016|Articles, கட்டுரை|

காதல் கடிதம் எழுதுபவன் “காதல் கவிதை எழுதுபவர்கள் கவிதை மட்டுமே எழுதுகிறார்கள். அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே காதலிக்கிறார்கள்”. - நா. முத்துக்குமார். எந்த ஒரு காதல் கதையிலும் மிக சுவாரஸ்யமான கட்டம் தன் காதலை வெளிப்படுத்தும் இடமாகவே இருக்கும். நான் அறிந்து இந்த விதிக்கு மட்டும் விலக்கே இல்லை. காதலை சொல்லும் விதம் மானுட சரித்திரத்தில் பல்வேறு பரிணாமங்களைக் கண்டிருக்கிறது. நமது சங்க இலக்கியம் தலைவனுக்கும் தலைவிக்குமான தூது குறித்து பல்வேறு குறிப்புகளைத் தந்திருக்கிறது. தொல்காப்பியர்

பாரம்பரிய நெல் திருவிழா 2015

By |2015-06-27T20:58:06+00:00June 27th, 2015|Articles, கட்டுரை|

பாரம்பரிய நெல் திருவிழா 2015 இரண்டு நாள் தேசிய மாநாடு ஆதிரங்கம், திருவாரூர் மாவட்டம். "ஐயாயிரம் கோடி கடன் வாங்கி அதைத் திருப்பிக் கட்டாதவன் யாரும் இதுவரை தற்கொலை பண்ணிக்கிட்டதா தெரியலைங்க. ஆனா, ஐயாயிரம் ரூபாய் கடனுக்கு எத்தனையோ விவசாயிங்க மருந்து குடிச்சு சாவதை தினமும் நாம பார்க்குறோம். இந்த நாட்டிலேயே மானம் மரியாதையுள்ள ரோஷக்காரன்னு ஒருத்தன் இருக்கான்னா, அவன் இந்த நாட்டோட விவசாயிதான்.” - தேசிய நெல் திருவிழா அரங்கில் ஒரு விவசாயியின் பேச்சு. எனது

சன்மானம்

By |2014-07-24T21:16:22+00:00July 24th, 2014|Articles, எண்ணங்கள், கட்டுரை|

சன்மானம் எனது வாழ்நாள் சந்தோஷம், அன்று ஒரு சின்ன தபால் உறையில் என் மேசையின் மீது காத்திருந்தது. எனது பெயருக்கு வந்திருந்த அந்தக் கடித உறை பிரிக்கப் படாமலேயே இருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆனந்த விகடனில் இருந்து ஒரு கடிதமும், எனது 'சைக்கிள் டாக்டர்' கதைக்கான சன்மானமாக ரூபாய் மூவாயிரத்திற்கான காசோலையும் இருந்தது. அதுதான் எனது 44 வயதில் நான் சொந்தமாக சம்பாதிக்கும் முதல் பணம் என்பதை உணர்வதற்கு, ஒரு ஐஸ்கிரீம் முழுவதுமாக உருகுவதற்கான நேரம் ஆனது!

காவியக் கவிஞர் வாலி

By |2013-07-19T12:18:18+00:00July 19th, 2013|Articles, ஆளுமை, கட்டுரை, நினைவு அஞ்சலி|

காவியக் கவிஞன் இசைஞானி இளையராஜாவின், திருவாசகம் பாடல்களின் இசை வடிவத்தின் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். விழாவில், வைகோ ஆற்றிய உரை, எனது வாழ்நாளில் நான் கேட்டு வியந்த ஒரு அற்புத மேடைப் பேச்சுகளில் ஒன்று! மேடையில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாயைப் பிளந்து (நிஜமாகவே வாய் பிளந்து) கேட்டு இரசித்தார்! விழா நிறைவில், இளையராஜாவை சந்தித்து, ஒரு பட்டுத் துண்டு அணிவித்தேன். மிகுந்த உற்சாகமான மனநிலையில் இருந்த அவர், என்னைப் பார்த்து, கருணா!

நினைவுகளின் வேரினூடே சில மரங்கள்…

By |2012-11-27T15:07:16+00:00November 27th, 2012|Articles, கட்டுரை|

6000 வருடம் வயதுள்ள ஆப்ரிக்காவின் பேபாப் மரம் எனது இளம் வயது நினைவுகளின் அடுக்குகளில் நிறைய மரங்களும் பதிந்திருக்கிறது. எனது நான்காம் வகுப்பின் போது பள்ளிக் கல்விச் சுற்றுலாவாக அடையாறு ஆலமரம், அஷ்ட லட்சுமி கோவில், மெரினா கடற்கரை மற்றும் மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றனர். அவற்றில் எனக்கு இன்னமும் நினைவில் இருப்பது அடையாறு ஆலமரத்தைப் பார்த்ததுதான்! வேருக்கும், விழுதுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் தெரியாமல், அந்த பரந்த நிலம் முழுதும் தனது

நாகரீக சிவில் சமூகம்.

By |2012-11-21T23:33:01+00:00November 21st, 2012|Articles, எண்ணங்கள், கட்டுரை|

நாகரீக சிவில் சமூகத்தில் மரண தண்டனை கூடவே கூடாது! முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். ஒரே ஒரு சந்தேகம்தான். அப்படியானல் கொடும் குற்ற செயல்கள் புரியும் குற்றவாளிகளை என்ன செய்வது? மன்னிப்போம்! மறப்போம்! அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுவோம் என்று மகாத்மா சொன்னதைப் போல செய்து விடலாமா? அத்தனைப் பெருந்தன்மையும், ஞானமும் இருக்கும் நாட்டில் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்குமே வேலையிருக்காதே? மரண தண்டனையை கடுமையாக எதிர்க்கும் பலரும் அதற்கு மாற்றாக சொல்வது என்ன? மரண தண்டனை தரும் அளவிற்கு குற்றம் புரிந்தவர்களுக்கு

ப்ராய்லர் கோழிகள்

By |2012-06-17T20:54:44+00:00June 17th, 2012|Stories, எண்ணங்கள், கட்டுரை, கல்வி|

ஆயிரத்து நூற்று எண்பத்து ஒன்பது மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடத்தை இந்த மாணவி பெற்றிருக்கிறார், அடுத்த இடத்துக்கு இந்த மாணவி, அதற்கு அடுத்த இடத்துக்கு வேறொரு பெண் என பல இளம் முகங்களை +2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நாள் முழுவதும் தொலைக் காட்சியில் காட்டிக் கொண்டே இருந்தார்கள். உடன் முகம் நிறைந்த சிரிப்புடன் அவர்களின் பெற்றோர்கள் அந்த மாணவிகளை கட்டியணைத்தபடி இனிப்பு ஊட்டிக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சிகளில் என் கண்ணுக்குப் புலப்பட்டது, அந்த மாணவ,

ததும்பும் நீர் நினைவுகள்

By |2012-03-22T20:25:18+00:00March 22nd, 2012|Articles, கட்டுரை|

  நீரின்றி அமையாது....     நான் பிறந்து வளர்ந்த வீடு, இப்போது நகரின் மையப் பகுதியின் போக்குவரத்து நெரிசலிலும், பேருந்துகளின் காற்றொலிப்பான் சத்தத்திலும் சிக்குண்டு இருக்கிறது. சில ஆண்டுகளாகவே, அருகில் இருக்கும் எங்கள் குடும்பத்தின் தோட்டத்தில் ( விவசாய நிலத்தில்) வசித்து வரும் காரணத்தால், அதன் அமைதியான சூழலும், சுத்தமான காற்றும் எங்களுக்கு மிகவும் பழகிப் போய்விட்டது. என் மகள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்கள் ஓடியாட வசதியாகவும், பல ரக வெளிநாட்டு கிளி வகைகள்