இறுதித்தீர்ப்பு
தீர்ப்பு வந்து விட்டது. எதிர்பார்த்த தீர்ப்புதான் எனிலும், பதினெட்டு ஆண்டு காலம் இருபுறமும் விடாப்பிடியாக வழக்கை நடத்திப் பெற்றத் தீர்ப்பு அது. தேவசகாயம் & சன்ஸ் வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா வழக்கில் தேவசகாயத்துக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. வழக்கைத் தொடர்ந்த கேரள அரசின் தொழிலாளர் நலத்துறை, பிரதிவாதிக்கு வழக்கு செலவுத் தொகையாக ரூபாய் பன்னிரெண்டாயிரம் தரவேண்டும் என்கிற கடுமை நாங்களே எதிர்பாராதது. வழக்கின் பிரதிவாதியான டேவிட் தேவசகாயத்தின் மகன் பீட்டர் தேவசகாயம் இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்காக