மருத்துவ மேதைகள் பற்றிய தொடர்.
அனஸ்தீசியா..
அனஸ்தீசியா. கேலனின் கருநிற பித்த நீர் கூற்று பொய் என்றாகிப் போனபின், கான்ஸர் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து குணமாக்குவது என்பது ஒரளவு சாத்தியமே என்று அனைத்து மருத்துவர்களும் கருதினர். ஆனால், மருத்துவ உலகம், அத்தகைய அறுவை சிகிச்சைகளுக்கு அப்போது தயாராக இல்லை என்பதே உண்மை. 1760ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான ஜான் ஹண்டர், லண்டனில் இருந்த தனது மருத்துவமனையில் தனது நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பிக்கிறார். அதற்கான முன்னோட்டமாக, அவர்