Articles

ததும்பும் நீர் நினைவுகள்

By |2012-03-22T20:25:18+00:00March 22nd, 2012|Articles, கட்டுரை|

  நீரின்றி அமையாது....     நான் பிறந்து வளர்ந்த வீடு, இப்போது நகரின் மையப் பகுதியின் போக்குவரத்து நெரிசலிலும், பேருந்துகளின் காற்றொலிப்பான் சத்தத்திலும் சிக்குண்டு இருக்கிறது. சில ஆண்டுகளாகவே, அருகில் இருக்கும் எங்கள் குடும்பத்தின் தோட்டத்தில் ( விவசாய நிலத்தில்) வசித்து வரும் காரணத்தால், அதன் அமைதியான சூழலும், சுத்தமான காற்றும் எங்களுக்கு மிகவும் பழகிப் போய்விட்டது. என் மகள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்கள் ஓடியாட வசதியாகவும், பல ரக வெளிநாட்டு கிளி வகைகள்

புத்தாண்டு பரிசு..

By |2011-12-29T22:08:15+00:00December 29th, 2011|Articles, எண்ணங்கள்|

  புத்தாண்டு பரிசாக எனது கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஜெயமோகன் எழுதி வம்சி புக்ஸ் வெளியிட்ட "அறம்" புத்தகத்தை இன்று பரிசளித்தேன். எங்கள் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரியும் தமிழ் மொழி அறியாத வெளிமாநிலத்தவர்கள் ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏறக்குறைய 250 புத்தகங்களை ஒரே நேரத்தில் பரிசாக அளித்தது, எனக்கு பேருஉவகை அளித்தது என்றே சொல்ல வேண்டும். எங்கள் பொறியியல் கல்லூரியின் பேராசியர்களில் பலர் தத்தம் துறையினில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு பி.எச்.டி முடித்தவர்கள். பல

ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..

By |2011-12-19T20:53:49+00:00December 19th, 2011|Articles, Speeches, விழா மேடைகள்|

  ஒரு நாள் மாலை பவாவுடன் மிகத் தீவிரமாக, அப்போது நான் அந்த நேரத்தில் படித்துக் கொண்டிருந்த வெட்டுப் புலி என்ற நாவலைப் பற்றி மிகவும் பாராட்டிக் கொண்டிருந்தேன். பவா என்னிடம் பேசிக் கொண்டே, அவரது கைப்பேசியில் யாரையோ அழைத்து, இதோ பேசுங்கள்! என்று என்னிடம் கொடுத்தார். யாரிடம்? என்று கேட்டதற்கு, இப்போது நீங்கள் பாராட்டிக் கொண்டிருந்தீர்களே, வெட்டுப் புலி நாவல், அதை எழுதியவர் என்று சொன்னார். அப்படித்தான் எழுத்தாளர் தமிழ்மகன் எனக்கு அறிமுகமானார். ஓரு எழுத்தாளராக ஏற்கனவே

அறம் புத்தகம் வெளியீட்டு விழா

By |2011-12-01T19:56:46+00:00December 1st, 2011|Articles, Speeches, விழா மேடைகள்|

  நண்பர்களே! பல ஆயிரம் வாசகர்களை ஒன்றரை மாத காலம் ஒரு உன்னத மனநிலையில் நிறுத்திருந்தது என்று இந்த அறம் புத்தகத்தின் அட்டையில் ஒரு இடத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அது நான் என் பல நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள்தாம். ஷைலஜாவும் அதே போல உணர்ந்திருப்பது, பப்ளிஷர் அல்லாத அவரின் வாசக மனதை காட்டுகிறது. அவர் ஒரு போதும் தொழில் முறை பப்ளிஷர் ஆக முடியாது என்னும் என்னுடைய கருத்தையும் உறுதி செய்கிறது. அறம், சோற்றுக் கணக்கு,

அனஸ்தீசியா..

By |2011-11-24T21:28:15+00:00November 24th, 2011|Articles, தொட்டு விடும் தூரம் தான்...|

அனஸ்தீசியா. கேலனின் கருநிற பித்த நீர் கூற்று பொய் என்றாகிப் போனபின், கான்ஸர் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து குணமாக்குவது என்பது ஒரளவு சாத்தியமே என்று அனைத்து மருத்துவர்களும் கருதினர். ஆனால், மருத்துவ உலகம், அத்தகைய அறுவை சிகிச்சைகளுக்கு அப்போது தயாராக இல்லை என்பதே உண்மை. 1760ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான ஜான் ஹண்டர், லண்டனில் இருந்த தனது மருத்துவமனையில் தனது நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பிக்கிறார். அதற்கான முன்னோட்டமாக, அவர்

ஜெயமோகன் வந்திருந்தார்..

By |2011-11-11T07:04:34+00:00November 11th, 2011|Articles, ஆளுமை|

  சென்ற வாரத்தில் இரண்டு நாள் எழுத்தாளர் ஜெயமோகன் திருவண்ணாமலைக்கு வந்து எங்களுடன் தங்கியிருந்தார். எங்கள் பெரிய கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் தம்பதிகள் இருவருமே அவருடைய வாசகர்கள். அந்த திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்வு அதற்கு முந்தின நாள் எங்கள் கல்லூரியில் உள்ள திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. மணமக்கள் வீட்டார் இருவருமே, ஒருவரை ஒருவர் ஏற்கனவே நன்றாக தெரிந்து வைத்திருந்ததாலோ, அல்லது எல்லா ஏற்பாட்டினையும் பொது நண்பர்கள் சிலர் பார்த்துக் கொண்டதால் வந்த சவுகரியத்தினாலோ, அனைவருமே மிக

கூடங்குளம் : சாபமல்ல.. வரமே.

By |2011-10-30T21:35:33+00:00October 30th, 2011|Articles, அறிவியல்|

  கூடங்குளம் : சாபமல்ல.. வரமே.   இந்த அணு உலை அத்தனை முக்கியமென்றால், இதனை போயஸ் தோட்டத்திலோ அல்லது ரேஸ் கோர்ஸ் ரோட்டிலேயோ அமைத்துக் கொள்ளட்டுமே? சமீபத்தில் வலைத் தளங்களில் நான் படித்த பல ஆவேசமான கேள்விகளில் இதுவும் ஒன்று. இடிந்தகரையில் ஒரு பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டதும், கூடங்குளம் அணுமின் நிலையத்தினை உடனே இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து இருப்பதும் நம் சுற்று சூழல் ஆர்வலர்களை இது போன்ற மேலும் பல

மயானங்களைத் தேடி

By |2011-10-30T14:07:37+00:00October 30th, 2011|Articles, தொட்டு விடும் தூரம் தான்...|

மயானங்களைத் தேடி... 1533ஆம் ஆண்டின் அந்தக் குளிர் காலத்தில், ஆண்ட்ரியஸ் வெசாலியஸ் என்னும் அந்த பத்தொன்பது வயது இளைஞன் பெல்ஜியத்திலிருந்து பாரிஸ் பல்கலைகழகத்திற்கு சர்ஜரி படிக்க வந்து சேர்ந்தான். அவன் மிகவும் கவரப்பட்டிருந்த கேலனின் (anatomy) உடல்கூறியல் மற்றும் (pathology) நோய்கூறியல் (என் மொழிபெயர்ப்பு சரியா?) படிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் அவன் பாரிஸ் நகருக்கு வந்திருந்தான். வெசாலியஸ் வந்து சேர்ந்த நேரம், அவனது பல்கலைகழத்தில், உடல் கூறியல் துறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இறந்த உடல்களை

பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்

By |2011-10-28T18:17:16+00:00October 28th, 2011|Articles, ஆளுமை|

  பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்.   நேற்று காலையில் எனது செல்போன் ஒலித்தது. புதிய எண்ணாக இருக்கிறதே என்று நினைத்து கொண்டு எடுத்து காதில் வைக்கிறேன். கருணா! நான் பாரதிராஜா பேசுகிறேன்! என்றது அந்த குரல். தமிழகத்தின் எல்லைகளை தனது கரகரத்த குரலால் 35 ஆண்டுகளாக கட்டி வைத்திருக்கும் இயக்குநர், தமிழ் சினிமா வரலாற்றில் வெளிவந்த முதல் நிஜ சினிமாவின் படைப்பாளி பாரதிராஜாதான் அழைக்கிறார். எத்தனை முறை கேட்டாலும் என்னை லேசாக சிலிர்க்க வைக்கும் அவரின்

ஹிப்போகிரடஸ்.

By |2011-10-27T16:18:46+00:00October 27th, 2011|Articles, தொட்டு விடும் தூரம் தான்...|

  ஹிப்போகிரடஸ் காலத்தில்.. கான்ஸர் என்ற இந்த நோய்க்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று பார்க்கலாமா? பார்க்கலாம். சுவாரஸ்யமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. முதன் முதலில் ஹிப்போகிரடஸ்தான் கி.மு.400 ஆண்டு வாக்கில் அவரின் ஒரு மருத்துவ குறிப்புகளில் இந்த நோயினை கார்கினோஸ் என்று குறிப்பிடுகிறார். கிரேக்கத்தில் கார்கினோஸ் என்றால் நண்டு. இந்த கான்ஸர் கட்டியானது ஒரு விதத்தில் அது உருவாகியிருக்கும் இடத்தை தனது இரத்த நாளங்களால் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும். அது ஒரு நண்டு மணலில்