புத்தாண்டு பரிசு..
புத்தாண்டு பரிசாக எனது கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஜெயமோகன் எழுதி வம்சி புக்ஸ் வெளியிட்ட "அறம்" புத்தகத்தை இன்று பரிசளித்தேன். எங்கள் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரியும் தமிழ் மொழி அறியாத வெளிமாநிலத்தவர்கள் ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏறக்குறைய 250 புத்தகங்களை ஒரே நேரத்தில் பரிசாக அளித்தது, எனக்கு பேருஉவகை அளித்தது என்றே சொல்ல வேண்டும். எங்கள் பொறியியல் கல்லூரியின் பேராசியர்களில் பலர் தத்தம் துறையினில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு பி.எச்.டி முடித்தவர்கள். பல