நினைவுகளின் வேரினூடே சில மரங்கள்…
6000 வருடம் வயதுள்ள ஆப்ரிக்காவின் பேபாப் மரம் எனது இளம் வயது நினைவுகளின் அடுக்குகளில் நிறைய மரங்களும் பதிந்திருக்கிறது. எனது நான்காம் வகுப்பின் போது பள்ளிக் கல்விச் சுற்றுலாவாக அடையாறு ஆலமரம், அஷ்ட லட்சுமி கோவில், மெரினா கடற்கரை மற்றும் மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றனர். அவற்றில் எனக்கு இன்னமும் நினைவில் இருப்பது அடையாறு ஆலமரத்தைப் பார்த்ததுதான்! வேருக்கும், விழுதுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் தெரியாமல், அந்த பரந்த நிலம் முழுதும் தனது