கனவுத் தொழிற்சாலை நோக்கி…
ரசனை என்பது விருப்பம் சார்ந்தது. ஆனால், விருப்பம் என்பது அறிவு சார்ந்தே இருக்கிறது. நமது இளைஞர்களின் ரசனை சார்ந்த விஷயங்கள் மிகக் குறுகிய வட்டத்தினுள் இருப்பதாக உணர்கிறேன். முக்கிய காரணம், அவர்கள் முன்னே கொட்டிக் கிடக்கும் பல்வேறு தரமான பிற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாததுதான். உதாரணத்துக்கு தமிழகத்தின் பொது ரசனைத்தளமான சினிமாவை பார்ப்போம். நம் இளைய தலைமுறையின் ரசனை என்பது அதிகபட்சம் அஜீத் vs விஜய் என்பதாகத்தானே இருக்கிறது. ஒரு சில அற்புதமான இளைஞர்களைத் தவிர