கவர்னரின் ஹெலிகாப்டர் II
இரண்டாம் பாகம்: உங்கள் ஊரில் ஹெலிபேட் இருக்கா? இரண்டாம் முறையாக கவர்னரின் ஏடிசியை (Aides-de-Camp) சந்தித்தப் போது இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. எதற்காக இதை கேட்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. சென்னைக்கு அருகில் இருப்பதால் கவர்னர் நிச்சயம் காரில்தான் வருவார் என்றே எண்ணியிருந்தேன். ஏன் சார்? கவர்னர் ஹெலிகாப்டரிலா வருகிறார்! என்றேன். ஆமாம்! ஹிஸ் எக்ஸெலென்ஸி அவரது மனைவியுடன் வருவதால், சாலைப் பயணம் சரியாக வராது! எனவே கண்டிப்பாக ஹெலிகாப்டர்தான்! ஹெலிபேட் இருக்கா? இல்லையா? எங்கள்