பிரியாணி
ஒரு ஜனவரி மாதக் காலை வேளையில், கோபால் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த கணேஷ் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நானும், அவனும் கணித வகுப்புத் தேர்வுக்காக பயிற்சி கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த கணக்கு கூட இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது. கால்குலஸ் (Second Order Differential Equation)! கணக்கில் புலி என்று எங்களை நாங்களே அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருந்த காலம். இன்னும் சற்று நேரத்தில் சம்பத் சாரிடம் நாங்கள் கேட்டு வாங்கியிருந்த மாதிரித் தேர்வு