சன்மானம்
சன்மானம் எனது வாழ்நாள் சந்தோஷம், அன்று ஒரு சின்ன தபால் உறையில் என் மேசையின் மீது காத்திருந்தது. எனது பெயருக்கு வந்திருந்த அந்தக் கடித உறை பிரிக்கப் படாமலேயே இருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆனந்த விகடனில் இருந்து ஒரு கடிதமும், எனது 'சைக்கிள் டாக்டர்' கதைக்கான சன்மானமாக ரூபாய் மூவாயிரத்திற்கான காசோலையும் இருந்தது. அதுதான் எனது 44 வயதில் நான் சொந்தமாக சம்பாதிக்கும் முதல் பணம் என்பதை உணர்வதற்கு, ஒரு ஐஸ்கிரீம் முழுவதுமாக உருகுவதற்கான நேரம் ஆனது!