பறவை மனிதன் பால்பாண்டி
பறவை மனிதன் பால்பாண்டி நெல்லை கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் அறிவிக்கப்படாத பாதுகாவலனாக தனது வாழ்நாளை அர்ப்பணித்து வாழும் பறவை மனிதன் பால்பாண்டிக்காக, கரோனா கால நிவாரணமாக நன்கொடை கேட்டு டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தேன் எனது அன்பான வேண்டுகோளை ஏற்று பலரும் அவருடைய வங்கிக் கணக்குக்கு நன்கொடை அனுப்பியுள்ளனர். இதுவரை ஏறக்குறைய ஒரு லட்ச ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் வந்துள்ளதாக அறிகிறேன். உங்களுடன் வெறும் இணையப் பரிச்சயம் மட்டுமே கொண்டுள்ள எனது வேண்டுகோளை ஏற்று முகமறியாத நண்பர்கள்