கவர்னரின் ஹெலிகாப்டர்.

By |2013-04-01T21:53:32+00:00April 1st, 2013|Stories|

இந்த முறை நம்ம கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னரை அழைத்தால் என்ன கருணா? எனது நண்பர் பவா செல்லதுரைக்குதான் இந்த மாதிரி யோசனையெல்லாம் தோணும்! நிஜமாகவே "பெரிதினும் பெரிது கேள்" டைப்! இதெல்லாம் ஓவராத் தெரியலையா பவா என்றேன். இதிலென்ன தப்பு! முயற்சிதானே செய்யப் போறோம்! நடக்காதுன்னு இப்பவே ஏன் ஒரு முடிவுக்கு வரணும்? நியாயம்தானே! சரி! ஓகே! என்று சொல்லி விட்டேன். இப்படித்தான், எங்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக கவர்னரை அழைப்பது என்று முடிவு