கெட்ட குமாரன்

By |2014-04-28T13:41:12+00:00April 28th, 2014|Stories|

கெட்ட குமாரன் - சிறுகதை - ஆனந்த விகடன் - 2014-04-23 எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன! அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். மீதம் உள்ள 26 வழிகளும் எங்களைப் போன்ற மாணவர்கள் மட்டுமே அறிந்தது. ஒவ்வொரு திருட்டு வழியும் கண்டுபிடிக்கப் படும்போதெல்லாம், இன்னொரு ரகசிய வழி திறக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். எங்கள் நகரின் மையத்தில் பிரமாண்டமாக நிலைகொண்டிருக்கும் எனது