எதிர் பிம்பம்

By |2015-12-20T11:13:21+00:00December 20th, 2015|Stories, சிறுகதை|

மறுபடியும் ஏசையனோட இந்த ஸ்பெஷல் காஃபியை குடிக்க முடியுமான்னு ஒரு தடவை நெனைச்சுப் பார்த்தேன்! என்றபடி காஃபியை கையில் வாங்கிக் கொண்டான். எனது கெஸ்ட் ஹவுஸ் சமையல்காரர் ஏசையன் புன்னகைத்தபடி அங்கிருந்து விலகிச் சென்றார். எப்போ இந்த மாதிரி தோணுச்சு? ரெண்டாவது நாள் சாயந்திரம். மொத நாள் முழுக்க பயத்துலே அடிவயிறு பிடிச்சுருச்சு. எங்க யாருக்கும் பசியே எடுக்கலே! எப்படியாவது வெளியே போயிடணும். யாராவது எதிலாவது வந்து அழைச்சுட்டுப் போயிடுவாங்கன்னு ஜன்னலோரம் வெளியே பார்த்துட்டே பொழுது போயிடுச்சு.