மயானங்களைத் தேடி
மயானங்களைத் தேடி... 1533ஆம் ஆண்டின் அந்தக் குளிர் காலத்தில், ஆண்ட்ரியஸ் வெசாலியஸ் என்னும் அந்த பத்தொன்பது வயது இளைஞன் பெல்ஜியத்திலிருந்து பாரிஸ் பல்கலைகழகத்திற்கு சர்ஜரி படிக்க வந்து சேர்ந்தான். அவன் மிகவும் கவரப்பட்டிருந்த கேலனின் (anatomy) உடல்கூறியல் மற்றும் (pathology) நோய்கூறியல் (என் மொழிபெயர்ப்பு சரியா?) படிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் அவன் பாரிஸ் நகருக்கு வந்திருந்தான். வெசாலியஸ் வந்து சேர்ந்த நேரம், அவனது பல்கலைகழத்தில், உடல் கூறியல் துறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இறந்த உடல்களை